தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு காணி மீட்பு மற்றும் குடியேற்றப் பிரிவில் கடமையாற்றும் கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் தாக்குவதற்காக சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரும்புக் கம்பி மற்றும் அவர்கள் வந்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தாக்குதலில் காயமடைந்த இரு உத்தியோகத்தர்களும் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
பின்னர், இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்குக்கு அருகில் பெருந்திரளான மக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை இரும்புக் கம்பியால் தாக்கி பலத்த காயப்படுத்தியதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி உட்பட ஐவரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.