மரம் வீழ்ந்து இரு பெண் தொழிலாளர்கள் காயம் : நோர்வூட்டில் சம்பவம்!

130 0
நோர்வூட் பகுதியில் இன்று வியாழக்கிழமை (28) தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இருவர் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் பலத்த காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மலையகத்தின் மேற்குப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.  இந்நிலையில் இன்றுறைய தினம் காலை 10.30 மணியளவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது மரம் ஒன்று வீழந்ததாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரண்டு பெண்கள்   காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.