நெல் மூடைகள் திருட்டு

145 0

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்கா 2 கிராம சேவையாளர் பிரிவில்  களஞ்சியப்படுத்தி  வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள் , 2 பசளைகள்   கதவை  உடைத்துத் திருடப்பட்டுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை(26) பதிவாகியுள்ளது.இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற   முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு  தடயவியல் பொலிஸாரும்  விரைந்து  மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.