யாழில் போதைக்கு அடிமையானவர்கள் அதிகளவில் கைது

35 0

யாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 190 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவர்களை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர்.

மருத்துவ பரிசோதனை அறிக்கையின் படி 190 பேரில் 125 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில், இவர்களில் சுமார் 25 பேரை நீதிமன்றங்களின் ஊடாக மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.