கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்!

131 0

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதன்போது ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் அங்கு ஆஜராகியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.