யாழ். சிறைச்சாலையில் 16 கைதிகள் விடுதலை

36 0
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்று திங்கட்கிழமை (25) விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து திங்கட்கிழமை காலை 9 மணிக்கு  சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.

ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 1,004 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.