வெல்லம்பிட்டியில் கசிப்புடன் கைதான சமாதான நீதிவான்!

68 0

வெல்லம்பிட்டிய, கொஹிலவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சியபோது சமாதான நீதிவான் மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவருடன் 22,500 மில்லி சட்டவிரோத  கசிப்பு நான்கு பீப்பாய்களில் 7 இலட்சத்து 56,000 மில்லி கோடா, 26 அடி நீளமான இறப்பர் குழாயில் பொருத்தப்பட்ட செப்புச் சுருள் மற்றும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு கொஹிலவத்தை பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றுக்கமைய குறித்த வீட்டைச் சுற்றிவளைத்து  இவர்களைக் கைது செய்தனர்.