திருகோணமலையில் வயல்வெளியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

156 0

திருகோணமலை-நாமல்வத்தை வயல்வெளியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆணின் சடலமானது இன்று (23.12.2023) மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா -குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீக் முகமது முஸம்மில் (34வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

கிண்ணியாவிலிருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு புல் வெட்டுவதற்காக வருகை தந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.