மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று (23.12.2023) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டமானது மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
அத்துமீறி குடியேறிய குடியேற்றவாசிகளிடமிருந்து மேய்ச்சல் நிலத்தை மீட்டு தருமாறு கோரி மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது.
போராட்டத்தின் போது ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது்டன் அமைதியான முறையில் போராட்டம் இடமபெற்றமை குறிப்பிடத்தக்கது.

