15 இலட்சம் பெறுமதியான பாலை மர குற்றிகள் மீட்பு

111 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இரகசியமான முறையிலே கடத்திச் செல்லப்பட்ட சுமார் 15 இலட்சம் பெறுமதியான பாலை மர குற்றிகள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த டிப்பர் வாகனத்தில் பாலை மரக் குற்றிகளை போட்டு மேலே சல்லிக்கற்களை போட்டு  மறைத்து  மிகவும் சூட்சுமமான முறையில் கொண்டு  செல்லப்பட்ட  வாகனத்தை சோதனையிட்டபோது குறித்த வாகனத்தில் இருந்து சுமார் 15 லட்சம் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றியதுடன், அதனுடைய சாரதியை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த நபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.