வனாத்தே சுட்டாங்ஙின் 4 கோடி சொத்துக்கள் குறித்து விசாரணை

149 0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ரங்க பிரசாத் குணசேகர எனும் ‘வனாத்தே சுட்டாங்’  4 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் வாங்கியது தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய 1 கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான டொயோட்டா அக்வா சொகுசு கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் நபர் ஒருவரைக் கொன்ற சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் ‘வனாத்தே சுட்டாங்’ என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சொகுசு காரை சந்தேகநபர் தனது மனைவியின் பெயரில் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொரளை மெகசின் வீதியில் சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வீடு கட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.