முதல்வர் ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு

146 0

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்துப் பேசினார். சொத்து குவிப்பு வழக்கில் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லையில் மீட்பு நிவாரணப் பணிகளை பார்வையிட்டு சென்னை திரும்பியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை அவரது இல்லத்தில் பொன்முடி சந்தித்துப் பேசினார். அப்போது, திமுக தலைவர் என்ற அடிப்படையில் முதல்வருடன் வழக்கு தொடர்பாகவும், மேல்முறையீடு தொடர்பாகவும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.