கடந்த நாட்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மன்னார் மாவட்டத்தின் பாலியாறு கிராமத்தைச் சேர்ந்த 25 குடும்பங்களை இன்று 22/12/2023 எமது செயற்பாட்டாளர்கள் சந்தித்ததுடன் அம்மக்களுடன் கலந்துரையாடிஅவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் உலர் உணர்வுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர். குறித்த உதவியானது யேர்மன் வாழ் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டது . மேலும் யேர்மன் வாழ் தமிழ் உறவுகளுக்கு நன்றிகளை தெரிவித்துகொள்வதாக மன்னார் மாவட்டத்தின் பாலியாறு கிராமத்தைச்சேர்ந்த மக்கள் தெரிவித்தனர் .







