யேர்மனி நெற்ரெற்றால் நகரில் நினைவுகூரப்பட்ட தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

256 0

யேர்மனி நெற்ரெற்றால் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17 ஆவது ஆண்டு ( 16.12.2023 அன்று )நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
எமது தேசவிடுதலையானது ஆயுதரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் களத்தில் போராளிகள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அதேவேளையில் எமது தேசத்தின் புத்தியீவிகள் உலக அரங்கில் எமது விடுதலையை வென்றெடுக்கத் தமது ஆளுமையாலும் அரசியல் சாணக்கியத்தாலும் முழுவீச்சாக நகர்வுகளை மேற்கொண்டார்கள். அத்தகையவர்களில் தேசத்தின் குரல் என தேசியத்தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட பாலாண்ணையின் பணி அளப்பெரியது. அவரின் இழப்பு எவராலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பாலாண்ணை எம்மை விட்டுப்பிரிந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அவரின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தவாறு கடந்த சனிக்கிழமை (16.12.2023) தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையால் நெற்ரெற்றால் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. மாலை 17,45 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதோடு தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் கலைபண்பாட்டுக் கழத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுதலை நடனங்கள், எழுச்சிப்பாடல்கள் இடம்பெற்றதோடு தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் நினைவுகளும் பகிரப்பட்டது. இறுதியாகத் தேசியக்கொடி கையேற்றலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் எமது தாரக மந்திரத்தை உச்சரித்து, நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் பாலாண்ணாவின் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டு உணர்வோடு நிகழ்வு நிறைவுபெற்றது.