ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் – 100 கப்பல்கள் பாதையை மாற்றின

70 0

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தவிர்ப்பதற்காக 100க்கும் மேற்பட்ட கொள்கலன் கப்பல்கள்;சூயல்கால்வாயிலிருந்து வேறு பாதைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

100க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தவிர்ப்பதற்காக தென் ஆபிரிக்க கடற்பகுதியை பயன்படுத்துகின்றன.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் கப்பல்போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கான அறிகுறி இது என கார்டியன் தெரிவித்துள்ளது.

103 கப்பல்கள் ஏற்கனவே பாதையை மாற்றியுள்ளன என குஹ்னே நஜெல் என்ற கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கப்பல்கள் மேலும் 6000 கடல்மைல் தூரம் அதிகமாக பயணிக்கவேண்டியுள்ளது இதன் காரணமாக விநியோகங்கள் ஒரு மாத காலம் தாமதமாகும் நிலையேற்பட்டுள்ளது.

19000 கப்பல்கள் வருடாந்தம் சூயல்கால்வாய் ஊடாக பயணிக்கின்றன. ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கான எரிபொருள் மற்றும் வர்த்தக பொருட்களிற்கான முக்கிய விநியோகமார்க்கமாக இந்த கடல்மார்க்கம் காணப்படுகின்றது.

எண்ணெய் கப்பல்கள் எரிவாயு கப்பல்களும் தங்கள் பாதையை மாற்றியுள்ளன.

பிபி நிறுவனம் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளது எனினும் ஷெல் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.