சட்ட வைத்திய நிபுணரின் உத்தியோகபூர்வ முத்திரையைப் பயன்படுத்தி போதை மாத்திரைகளை பெற சிபார்சு செய்த இளைஞர் கைது !

157 0

சட்ட வைத்திய நிபுணரின் உத்தியோகபூர்வ முத்திரை போன்று போலி முத்திரையைப் பயன்படுத்தி பல்வேறு நபர்களுக்கு போதை தரக் கூடிய மாத்திரைகளை கொள்வனவு செய்வதற்கு சிபார்சு செய்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து  போதைப்பொருள், சட்ட வைத்திய அதிகாரியின் உத்தியோகபூர்வ முத்திரை உட்பட  பலவற்றைக் கைப்பற்றியதாக நால்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாலதெனிய பிரதேசத்தை சேர்ந்த  இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நால்ல பிரதேசத்தில்  போதைப்பொருளுடன் காணப்பட்ட இளைஞர்  ஒருவரைக் கைது செய்து, வைத்தியரால் வழங்கப்பட்ட  ஐந்து  மருந்து பரிந்துரை துண்டுகளையும்  கைப்பற்றிய பொலிஸார், இவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்டபோது வடமேற்கு மாகாணத்தில் உள்ள பிரபல வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் உத்தியோகபூர்வ முத்திரை போன்ற போலி முத்திரைகளும் மற்றும் கடிதத் தலைப்புகளையும்  பொலிஸார் கைப்பற்றினர்.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.