கைவிலங்குகளுடன் தப்பிச் சென்ற சிறைச்சாலை கைதிகள் பொலிஸாரால் கைது

96 0
ஹம்பாந்தோட்டை – அகுணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு சிறைச்சாலை கைதிகள் பொலிஸாரிடமிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி இருந்த நிலையில் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.

இவர்கள் இருவரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போது பொலிஸ் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குகளுடன் தப்பிச் சென்று தனமல்வில பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் தலைமறைவாகி இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் பல்வேறு குற்றசெயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறையில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.