கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் குறித்த கான்ஸ்டபிள் காலிமுகத் திடல் சுற்றுவட்டத்துக்கு அருகில் போக்குவரத்தை கையாளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பின்னால் வந்த சந்தேக நபர் கான்ஸ்டபிள் மூச்சு விட முடியாதளவுக்கு அவரின் கழுத்தை நெரித்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதனைக் கண்ட அங்கு நின்றவர்கள் சந்தேக நபரின் பிடியிலிருந்து கான்ஸ்டபிளை விடுவித்து பின்னர் சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

