கிரிபத்கொடையில் இரவு விடுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்

126 0

கிரிபத்கொடையில் உள்ள இரவு விடுதிக்குள் இன்று திங்கட்கிழமை (18) அதிகாலை  துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விடுதிக்குள் வந்த நபர் ஒருவர் இன்றையதினம் அதிகாலை இந்த  துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

மதுபோதையில் காணப்பட்ட குறித்த நபர், பலமுறை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் இருப்பினும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் காரில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.