குற்றவாளிகள் எவரையும் விட்டு வைக்கப்போவதில்லை

137 0

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கும் பாதாளக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கும் நான் ஒன்றை கூறிக்கொள்கிறேன். தயவு செய்து இதனை நிறுத்திக்கொள்ளுங்கள்.

சண்டியர்கள் போல் இருப்பவர்கள் ஒருநாள் மரணிப்பார்கள். இந்த செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் நாம் அவர்களை தேடி வருவோம். ஒருவரையும் விட்டு வைக்கப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தென் மாகாண சமூக பொலிஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம். இதன்போது எவருக்கும் தலையீடு செய்ய இடமளிக்கப் போவதில்லை.

போதைப்பொருள் வர்த்தகர்களை விடுவிக்குமாறு எவர் கூறினாலும் அதனை நான் செய்யப்போவதில்லை. பொலிஸாருக்கு அடுத்த வருடம் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறேன். 30ஆம் திகதி ஆகும்போது நாடு முழுமையாக மாற்றம் அடைந்திருக்க வேண்டும்.

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு நான் ஒரு தகவலை வழங்க வேண்டியுள்ளது. தயவு செய்து இதனை நிறுத்திக்கொள்ளுங்கள். இன்றில் இருந்து (நேற்றுமுன்தினம்) போதைப்பொருள் விற்பனை செய்ய முடியாது. அவர்களை விட்டு வைக்க வேண்டாம் என கூறியுள்ளேன். போதைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என அவர்களுக்கு கூறுகிறேன்.

மேலும் பாதளாக்குழுகளை சேர்ந்தவர்களுக்கும் நான் ஒன்றை கூறிக்கொள்கிறேன். சண்டியர்கள் போல் இருப்பவர்கள் ஒருநாள் மரணிப்பார்கள் என்பது பாதாள குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் பொலிஸாரால் கொள்ளப்படுவார்கள். அல்லது எதிர் தரப்பினர்கள் அவர்களை கொள்வார்கள். அவர்கள் கொல்லப்பட்டதன் பின்னர் அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் பிள்ளைகளும் நிர்க்கதியாகியுள்ளனர்.

பாதாளக் குழுக்களின் தலைவர்களை தெரிந்தால் இந்தச் செய்தியை கூறுங்கள். என்ன செய்தாலும் இது தான் உங்களுக்கும் நடக்கும்.

அதனை புரிந்து கொள்ளுமாறு கூறுங்கள். இந்த செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் நாம் அவர்களை தேடி வருவோம்.

அப்போது இரு தரப்புக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறும். அவர்கள் கொல்லப்படுவார்கள். இதனை தவிர்க்க முடியாது. இவ்வாறு மரணத்தை தழுவதனை விட இந்த செயற்பாடுகளை நிறுத்தி குடும்பத்தினர்களுடன் பிள்ளைகளுடனும் சேர்ந்திருப்பது நல்லது அல்லவா? போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு பாதாள குழு உறுப்பினர்களுக்கும் இந்த இரண்டு செய்திகளையே கூற வேண்டியுள்ளது.

இந்த நடவடிக்கைகளை நாம் சரியாக செய்வோம். ஆகவே எம்முடன் இணையுமாறு அனைவரிடமும் வேண்டுக்கொள் விடுக்கிறோம்.

நாளை (நேற்று) முதல் நாம் எடுக்கும் நடவடிக்கைகளை காணமுடியும். அதிகாரிகள் அனைத்து பகுதிகளையும் நடவடிக்கைகளை ஆரம்பிப்போம். எமக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள்.தகவல்களை வழங்குங்கள். பொலிஸாரை ஊக்கப்படுத்துங்கள். பொதுமக்கள்  தம்முடன் இருப்பதை பொலிஸார் உணரும் போது அவர்களுக்கு அது சக்தியாக அமையும். அதனை நாம் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறோம் என்றார்.