காட்டு யானை தாக்குதல் – ஒருவர் பலி

132 0

தோட்டத்துக்கு வந்த யானையை விரட்டச் சென்ற நபர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி இன்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.

இப்பலோகம, புளியங்குளம் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

வாழை, தென்னை, வெற்றிலை பயிரிடப்பட்டிருந்த தோட்டத்துக்கு வந்த காட்டு யானையை விரட்டச் சென்ற போது, தோட்டத்தில் மறைந்திருந்த மற்றுமொரு காட்டு யானை இவ்வாறு தாக்கியுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.