டிப்பர் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய ‘பொடி ஷான்’ என்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (16) மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவிதுவ சந்தி பகுதியில் வீதித்தடைக்காக கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்களினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பாதாள உலகக் குழுத் தலைவர் ‘ஜெயலத் சுத்தா’ என்ற ராஜூவின் நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் 7 கிராம் 950 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

