இஸ்ரேல் தாக்குதலில் அல்ஜசீரா ஊடகவியலாளர் படுகாயம் : அம்புலன்ஸை தடுத்து நிறுத்தியதால் 5 மணிநேரத்தின் பின் ஊடகவியலாளர் உயிரிழப்பு

150 0
image

காசாவில் இடம்பெயர்ந்த மக்களிற்கான  பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில்  அல்ஜசீராவின் புகைப்படப்பிடிப்பாளர் கொல்லப்பட்டுள்ளார். காசாவிற்கான அல்ஜசீராவின் தலைவர் காயமடைந்துள்ளார்.

 

 

 

 

 

 

 

கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை தொடர்ந்து அதனை பார்வையிடுவதற்காக அல் ஜசீராவின் செய்தியாளர் வல்தஹ்தூஹ் புகைப்படப்பிடிப்பாளர் சாமர் அபு டோக்காவுடன் அந்த பாடசாலைக்கு சென்றுள்ளார்,அவ்வேளை இஸ்ரேலின் ஆளில்லா விமானம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றது என அல்ஜசீரா தெரிவித்;துள்ளது.சாமெர் காயங்களிற்குள்ளான பின்னர் ஐந்து மணித்தியாலங்கள் குருதிபெருக்கிற்குள்ளாகி உயிரிழந்தார் என தெரிவித்துள்ள அல்ஜசீரா இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ்களையும் மருத்துவபணியாளர்களையும் தடுத்து நிறுத்தினர் எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

காயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர் இஸ்ரேலின் தாக்குதலில் தனது குடும்பம் முழுவதையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.