பலாங்கொடை – உடவெல பிரதேசத்தில் இருந்து உட எல்லேபொல வரையான பகுதிகள் மண்சரிவு அபாயம் மிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

