’இராணுவத்தினரை தயார்ப்படுத்த வேண்டும்’

127 0

உலக சவால்களை வெற்றிக் கொள்ளக்கூடிய வகையில், இராணுவத்தினரை புதிய தொழில்நுட்ப முறைமையின் கீழ் தயார்ப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இந்த வருட இறுதியில் உலகம் முழுவதும் உள்ள ஆயுத படையினர் முகங்கொடுக்கவிருக்கும் புதிய சவால்கள் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல்களின் அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகளவில் அனுதாபத்தை தேடிக்கொள்வதற்கான சில நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.