ஐஸ் போதைப்பொருள் கடத்தியதாக பெண் கைது

131 0

ஐஸ் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொடை குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தொட்டலங்கவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றிலிருந்து சந்தேகநபர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்படும் போது சந்தேக நபர் சுமார் 15 இலட்சம் பெறுமதியான 100 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிம்புலா-எல  குணாவின் சகோதரர் ஷிவா தலைமையிலான  குழுவைச் சேர்ந்த 56 வயதுடைய காந்தி என்ற பெண்ணே  சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (14) அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.