துப்பாக்கிச் சூட்டில் வீட்டினருக்கோ அல்லது வேறு எவருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் வீட்டின் சுவர், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பன சேதமடைந்துள்ளன.
கைத்துப்பாக்கி மூலம் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அருகில் காணப்பட்ட வெற்று தோட்டாக்கள் ஐந்தையும் கைப்பற்றினர்.
வெளிநாட்டில் உள்ள சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

