மட்டு வாவியில் மீனவரின் வலையில் சிக்கிய ஆணின் சடலம் !

54 0
மட்டக்களப்பு நகர் வாவியில் இருந்து மெனிங் டிரைவ் வீதி பகுதி வாவிக்கரையில் உயிரிழந்த நிலையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை (14) இரவு 7 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு  தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாவியில் சம்பவதினமான இரவு மீன்பிடியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கிய நிலையில் அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் தடயவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.