சிலாபத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

120 0

ஒரு கிலோ 650 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 25 வயதுடைய நபர் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை (14) சிலாபம் குமாரகட்டுவ என்ற பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.