ராகம, வல்பொல பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாதோர் அங்கு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞன் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

