மேற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டவர்களே இந்த அனுபவத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அவர்கள் சென்ற வாகனத்தை துரத்தி வந்த யானை வாகனத்தின் கண்ணாடியை உடைத்து உணவை தேடியுள்ளது.
யாலதேசிய பூங்காவில் மரங்களிற்குஇடையிலிருந்து வெளிவந்த யானை கசுன் பசநாயக்கவும் அவரது குடும்பத்தினரும் காணப்படும் வாகனத்தை நோக்கி செல்வதையும் அதன் பின்னர் தனது தும்பிக்கையால் வாகனத்தின் கண்ணாடியைஉடைத்து தும்பிக்கையை உன்ளே விட்டு எதையோ தேடுவதையும்காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
யானை எங்கள் காலிற்கு அருகில் உணவை தேட தொடங்கியது வாகனச்சாரதி எதனையாவது கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் நாங்கள் எஞ்சியிருந்த சான்ட்விச்சினை கொடுத்தோம் என கசுன் தெரிவித்துள்ளார்.
ஏனையவற்றை வெளியே வீசுங்கள் என்றார் அதன் பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பிவந்தோம் சான்ட்விச்களும் சிப்ஸ்களுமே எங்களை காப்பாற்றியுள்ளன எவருக்கும் காயம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

