கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் பட்டாசு விற்பனை குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை

104 0

நீர்கொழும்பு கிம்புளாபிட்டிய பிரதேசம் பட்டாசு தயாரிப்புக்கு பிரசித்தமானது. இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் பட்டாசு தயாரிப்பதிலும் விற்பனை செய்து வருவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கள, தமிழ் புத்தாண்டு காலம், கிறிஸ்மஸ்  பண்டிகை காலம், புது வருட காலம் மற்றும் தேர்தல் காலங்களில் பட்டாசுகளுக்கு கேள்வி அதிகரிக்கும்.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்த வருடம்  கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கு குறைந்த அளவு கேள்வியே உள்ளதாகவும், இதன் காரணமாக தமது தொழில் மற்றும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.