மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் மீட்பு!

143 0

பெரிய வெங்காயத்துக்கான விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, சந்தைக்கு விநியோகிக்கப்படவிருந்த மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் கண்டறியப்பட்டுள்ளது.

லியனகேமுல்ல பகுதியில் உள்ள சேமிப்பு நிலையமொன்றில் வைத்தே குறித்த வெங்காய தொகை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோவுக்கும் அதிக நிறையுடைய பெரிய வெங்காயம் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 450 ரூபாவாக காணப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.