யாழில் ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள இயந்திர தகடு மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பூசகர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் நேற்று(12) கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த இயந்திரத் தகடு மற்றும் பொற்காசு என்பற்றை அவர் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

