இரண்டாவது நாளாகவும் நீர்கொழும்பில் தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன

105 0

தபால் ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு காரணமாக நீர்கொழும்பு பிரதான தபாலகம், கொச்சிக்கடை பிரதான தபாலகம் உட்பட  உப தபாலகங்கள் இரண்டாவது  நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (12) மூடப்பட்டிருந்தன.

இதன்காரணமாக தபாலகத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி செல்வதை காணக் கூடியதாக இருந்தது.

கடிதங்கள் அனுப்ப வந்தவர்கள் பணம் பெற வந்தவர்கள், மின்சார கட்டணங்களை செலுத்த வந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வந்து ஏமாற்றத்தோடு திரும்பி செல்வதை காணக் கூடியதாக இருந்தது.

கொச்சிக்கடை, நீர்கொழும்பு பிரதான தபாலகங்களில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.