கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று (09) நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது.
இன்று மாலை 5.00 மணியளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை சீரமைக்க சுமார் 02 மணித்தியாலங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

