வெளிநாட்டு வேலை வாய்ப்பு – ஒரு கோடிக்கு மேல் மோசடி – பெண் கைது!

65 0

தென்கொரியாவில் வெல்டிங் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவர் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கந்தான – நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய பெண்ணுக்கு எதிராக 15 முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் 5 இலட்சம் ரூபா தொடக்கம் 15 இலட்சம் ரூபா வரையான தொகையை ஒவ்வொருவரிடம் இருந்தும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பின்னர் பணியகத்திற்கு அழைத்து அவரை கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி, தென் கொரியாவின் வெல்டிங் துறையில் வேலைகளை வழங்குவதற்கு ஒரு சில வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு அவ்வாறான அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் இன்று (09) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.