மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கதிரியக்க நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக நேர கொடுப்பனவை குறைத்ததற்காக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கதிரியக்க வல்லுனர்கள் தெரிவிக்கையில், சுகாதார செயலாளர் விளக்கம் அளிக்கும் வரை மேலதிக சேவைகளில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர்.

