தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம்

187 0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை குறைந்தபட்சம் 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இது தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று(08.12.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம்: ஜனாதிபதி பணிப்புரை | Ranil Estate Worker Salary

இதன்போது கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,

மேலும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவை வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு கேட்டக்கொள்கின்றேன்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்டநிறுவனங்கள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

 

 

 

 

 

GalleryGallery