நெவாடா பல்கலைகழகத்தின் லாஸ்வெகாஸ் வளாகத்தில் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்ட நபரும் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஒருவர் உயிருக்காக போராடுகின்றார்.

பல்கலைகழக வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என பல்கலைகழக நிர்வாகம் முதலில் தகவல் வெளியிட்டிருந்தது.
பின்னர் மாணவர் சங்க கட்டிடத்திற்குஅருகில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.
மாணவர்களை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறு அறிவிப்பையும் நிர்வாகம் வெளியிட்டிருந்தது.
உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியதாகவும் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார் எனவும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் தெரியவில்லை என அதிகாரிகள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

