அடுத்த தேர்தல் வரும் வரையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளோம். அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாயின் கட்சி என்ற ரீதியில் நாம் தயாராகவே இருக்கிறோம்.
வெற்றி பெறும் மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாயின் கட்சி என்ற ரீதியில் நாம் தயாராகவே இருக்கிறோம். வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை எமது கட்சியிலிருந்து முன்னிறுத்துவோம். அந்த வேட்பாளர் யார் என்பது பாரிய கேள்வி உள்ளது. சில பெயர்கள் உள்ளன.
தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் அதேபோன்று எமது கட்சியுடன் இணைந்து செயற்பட விரும்பும் சிலரும் இருக்கின்றனர்.
இவர்களில் இருந்து சிறந்த ஒருவரை நாடும், நாட்டு மக்களும் கோரும் விதத்திலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் ஒருவரை முன்னிறுத்துவோம்.
அடுத்த தேர்தல் வரையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளோம்.
தனி ஒருவரை மையப்படுத்தி அவர் எமது கட்சி இல்லை என்பதா அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்காலத்தில் பயணிப்பதா என்பது தொடர்பிலும் கலந்துரையாட வேண்டும்.
பொதுஜன பெரமுன என்பது அரசியல் கட்சியாகும். கட்சி என்ற வகையில் கட்சியுடன் கலந்துரையாடுவோம். அதற்கு புறம்பாக தனி ஒருவரை மையப்படுத்தி நாம் செயற்படமாட்டோம் என்றார்.

