இறைச்சிக்காக எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் அளுத்கம தர்கா நகரப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸாரின் உத்தரவை மீறி தர்கா நகரை நோக்கி பயணித்த லொறியை பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர்.
பின்னர் தர்கா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த லொறியைப் பின் தொடர்ந்த பொலிஸாரால் அதனைச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சோதனை செய்த போது அதற்குள் இரண்டு எருமை மாடுகள் கட்டப்பட்டிருந்ததாகவும் லொறியை திறக்கும் போது வாகனத்தில் இருந்த சில எருமை மாடுகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதி களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

