ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

113 0
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ‘ஹரக்கட்டா’வை உடனடியாக உரிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (06) உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவைப் பெறுவதற்கு போதிய  ஆதாரங்கள் இல்லாவிட்டால் அதைச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்தே  நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.