ராஜஸ்தானில் பரபரப்பு- அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை

136 0

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுகதேவ் தனது வீட்டில் நேற்று மதியம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டது.இதில், சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

சுகதேவ் உடன் பேசிக் கொண்டிருந்த நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.