விசாரணைகளை மேற்கொள்ள தவறிய இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம்

169 0

கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நீர்கொழும்பு வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள தவறிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்கள் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்.

குளியாப்பிட்டி பொலிஸ் அத்தியட்சகரால் நேற்று திங்கட்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நபர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.