காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது சகோதரியை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளம, திம்பிரிகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தனது சகோதரியுடன் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிளால் அவர் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் கான்ஸ்டபிளால் தாக்கப்பட்ட அவரது சகோதரி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

