மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

118 0

அனுராதபுரம் பாதெனிய வீதியில் அம்பன்பொல பஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் அதன் ஓட்டுனர் தூக்கி எறியப்பட்டு எதிர்திசையில் வந்த மோட்டார் வானத்தில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது குறித்த நபரின் மனைவி மற்றும் மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமடைந்து அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளாமற்றைய

மற்றைய மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் காயமடைந்து அம்பன்பொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தின் சாரதி அம்பன்பொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, புத்தளம் சிலாபம் வீதியில் பங்கதெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நடைபாதையில் நடந்து சென்ற பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியின் இடதுபுறத்தில் நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.