உலகின் அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து நகரம்

153 0

உலகின் மிக அழகான நகரங்களின் பட்டியலில் பிரித்தானியாவின் நகரம் ஒன்று இம்முறை முதலிடத்தை பிடித்துள்ளது.

இதன்போது வடகிழக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ளது செஸ்டர் ‘Chester’ நகரமே உலகின் அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெனிஸ் நகரத்தை பின் தள்ளி இப்பெருமையை பெற்றுள்ளது.

குறித்த நகரமானது மிகப்பெரிய வரலாற்றையும், பிரித்தானியாவின் பல அற்புதமான அம்சங்களை கொண்டு விளங்குகிறது.

நாட்டின் மிகப்பழமையான பந்தய மைதானம் அமைந்துள்ள  செஸ்டர் ‘Chester’ நகரமானது 83.7 புள்ளிகளுடன் முதலிடத்திலும் , 83.3 புள்ளிகளுடன் Venice இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

உலகின் அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து நகரம் | First And Most Beautiful City In The World England

செஸ்டர் ‘Chester’ நகரத்தில் அமைந்துள்ள கட்டிடங்களே அந்நகரம் அழகு பெற காரணமாக அமைந்துள்ளது.

மற்றவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும் படியான வடிவமைப்பே உலகளவில் இப்புகழை செஸ்டர் ‘Chester’ நகரத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளது.