சமூக ஆர்வலரை கொலை செய்த 18 வயதுடைய இங்கிலாந்து பிரஜை கைது

158 0

மொரட்டுவை பிரதேசத்தில் பெண் சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் உயிரிழந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 18 வயதுடைய இங்கிலாந்து பிரஜை ஒருவர் ஆவார்.

உயிரிழந்தவர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நளினி பெர்னாண்டோ என்ற 83 வயதுடைய தனியாக வசிக்கும் பெண்ணாவார்.

 

இவர் நன்கொடையாக சேகரித்த பணத்தை விட்டமின்கள் வாங்குவதற்காக குறித்த சந்தேக நபர் கொள்ளையடிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது  தலையில் பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து கொலை செய்யப்பட்டவரின் கையடக்கதொலைபேசி ,பணம் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் சம்பவத்தின் போது அணிந்திருந்த உடைகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இவர் எதிர்வரும் ஜனவரி மாதம் சிறந்த உடற்கட்டமைப்பு இளைஞர் போட்டியில் பங்குபெற்ற இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.