எனது நண்பரான நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நான் சபையில் இல்லாத போது எனது பெயரை குறிப்பிட்டு உரையாற்றியதாக சக உறுப்பினர்கள் என்னிடம் குறிப்பிட்டார்கள்.
அவர் குறிப்பிட்ட விடயங்களை நான் முழுமையாக அறியவில்லை. ஆகவே இதற்கு நான் செவ்வாய்க்கிழமை (04) பதிலளிக்கிறேன் என்றார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய நீதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவரது அடிப்படை உரிமை மீறல் வழக்கை குறிப்பிட்டு நீதியரசரை சபித்தார். இந்த கருத்து பாரதூரமானது.ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

